Sunday, 17 August 2014

உந்தன் உயிரிலும் மேலாக என்னை நேசிக்கும் எனதருமை தகப்பனே

உந்தன் உயிரிலும் மேலாக
என்னை நேசிக்கும் எனதருமை தகப்பனே
உந்தன் கிருபையினால் இந்த பாக்கியம் பெற்றேன்

எத்தனை நன்றி சொல்லி துதித்தாலும்
உம் அன்புக்கு ஈடாகுமா
உந்தன் கிருபையினால் இந்த பாக்கியம் பெற்றேன்

இடி என இன்னல்கள் வந்தாலும்
வெண்பனி போல் மாற்றீனீரே
உந்தன் கிருபையினால் இந்த பாக்கியம் பெற்றேன்

எத்தனை பேர் என்னை ஏமாற்றினாலும்
நீர் என்னை ஆசீர்வதித்தீர்
உந்தன் கிருபையினால் இந்த பாக்கியம் பெற்றேன்

எந்தன் உயிரை கொல்ல தேடியபோது
உந்தன் சிறகுகளில்  மறைத்து  காத்தீரே
உந்தன் கிருபையினால் இந்த பாக்கியம் பெற்றேன்

அந்நிய நாட்டில் அகதியாய் வாழ்ந்தேன்
நீர் எனக்கு  அடைக்கலமே
உந்தன் கிருபையினால் இந்த பாக்கியம் பெற்றேன்
Share:

0 comments:

Post a Comment

Popular Posts

Blog Archive