Tuesday, 13 December 2011

முள்ளிவாய்காலில் இருந்து முல்லை பெரியார் அணை வரை

தமிழரை எவரும் எங்கும் என்ன வேண்டும் என்றாலும் செயல்லாம்  அதற்கு  தமிழரே துணையாக  இருப்பர் என்பது  50 ஆண்டு  கால போராடம் ஒடுக்கப்பட்ட  வரலாறு. உலகில் ஒருபோதும் நடந்து இராத  பேரவலம்
முள்ளிவாய்காலில்  நிகழ்ந்த பின்னரும் கூட சில தமிழ்  தலைவர்கள்  சிங்கள அரசுடன் பதவிக்காக  ஒட்டி வாழ்கின்றனர்.. தங்களை தமிழரின்  காவலர்  என  காட்டிகொள்ளும் சில தலைவர்கள்  யாழ்ப்பாணத்தில் உணர்ச்சி   ததும்ப   பேசுவதும்   பின்னர் கொழும்பில்  சிங்கள அரசுடன் இரகசிய    நட்பை பேணிவருவதும் தமிழ் ஈழ   தமிழரின் கசப்பான வரலாறு. தமிழ் ஈழ  தமிழர் வகை தொகை இன்றி கொலைசெய்யபட்டபோது  முத்துக்குமார் தொடக்கம் செங்கொடி வரை  கிளர்ந்து  எழுந்தபோது  எழுற்ச்சியை அடக்கிய குர்ந்னநிதி போன்றவர்களை  தமிழர்  நம்பலாம். உலக தலைவர்கள்  எம் தமிழ் தலைவர்களை  நன்றாக  அறிந்து  வைதுருக்கின்றனர்  என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்த  உண்மை DAM 999திரைப்பட தயாரிப்பாளர் மிக சரியாக புரிந்து வைத்துருக்கிறார். ஒரு  தண்ணிர் பிரச்சனையை வைத்து திரைப்படம் தயாரித்து ஒரு மாநிலத்தை திரட்ட  முடியும்   என்றால்  ஈழ  தமிழர்  கொத்து கொத்தாக கொலை செய்யபட்டபோது ஒரு திரைப்படம் தயாரித்து  தமிழகத்தை   திரட்ட முடியாமல்   போனது   எனோ? உச்சி தன்னை முகந்தால் திரைப்படம் திரைக்கு வந்தால்  தமிழகத்தை தட்டி எழுப்பி விடுமோ!   என்ற  மதிய  அரசின்  பயம்  காரணமாக  தமிழகத்தின்  கவனத்தை  திசை திருப்ப நீண்டகால முல்லை பெரியார்  அணை விவகாரத்தை தொடக்கிவிட்டுள்ளது. மத்திய அரசு முல்லை பெரியார்  அணை விவகாரத்தின்  வெற்றி     ஆனது    தமிழ் கட்சிகள்    தமது  கருத்து 
முரண்பாட்டை விட்டு ஒன்றுபட்டு தமிழனின் பலத்தை உலகிற்கு காட்டலாம்  வெற்றியும்  பெறலாம்   இது இனியாவது   சாத்தியப்படுமா ? இல்லை
((தமிழ் மக்களை கடவுள் தான் காப்பாற்ற  வேண்டும்  )) தந்தை செல்வா

Share:

1 comment:

  1. தமிழனைக் கடவுளாலும் காப்பாற்றமுடியாது.ஒரு திரைப்படத்தின் மூலம் மலையாளிகளை ஒன்றுதிரட்ட முடியுமோ என்னவோ.... ஆனால் சனல்4 காணொளிகளால்க்கூட தமிழனை ஒன்றுதிரட்ட முடியாமல்த்தானே போனது.
    உண்மையாக நடந்த அந்த படுபயங்கரக் காட்சிகளை வெளியிட்டும்கூட தமிழனை ஒன்றுதிரட்ட முடியவில்லையென்றால் ஒரு திரைப்படத்தின் மூலம் செய்யமுடியுமா?
    நேரடியாக அனைத்து வன்முறைகளிலும் பாதிக்கப்பட்டுக்கொண்டிருந்தபோதுகூட தமிழனுக்கு உணர்ச்சி வரவில்லையே.பிறகு எப்பொழுது வரும்?

    ReplyDelete

Popular Posts

Blog Archive