Saturday, 29 October 2011

லோகோக்களை தேடித்தர

 லோகோக்களை நொடியில் தேடித்தர பிரத்யேகமாக ஒரு தளம் உள்ளது.
இந்தத்தளத்திற்கு சென்று Search என்ற கட்டத்திற்குள் எந்த கருவிற்காகன லோகோ உருவாக்க வேண்டுமோ அந்த வார்த்தையை கொடுத்து Seek என்ற பொத்தானை சொடுக்கினால் அடுத்து வரும் திரையில் நாம் கொடுத்த தலைப்பிற்கு தகுந்தபடி பல வகையான லோகோக்கள் கிடைக்கும்.

Share:
Read More

Thursday, 27 October 2011

வலைப்பதிவின் மூலம் பிரபலமான சிறுமி

இவர் தந்தைக்கு தெரியாமல் விளையாட்டுத்தனமாக ஆரம்பித்த ஸ்டைல்ராக்கி எனும் வலைப்பதிவு புகழ் பெற்று நியூயோர்க் டைம்ஸில் இவரை பற்றி எழுதுவதற்காக உங்கள் அனுமதி தேவை என அழைப்பு வந்த பின்னர் மட்டுமே தான் தொடங்கிய வலைப்பதிவினைப் பற்றி பெற்றோரிடம் சொல்கிறாள். ஆனால் பெற்றோர்கள் அதைப் பற்றி அறியும் போது அவளின் வலைப்பதிவுக்கோ சுமார் 50,000 வாசகர்கள்.
பிறக்கும் தன் போன்ற சிறுவர்களுக்கு புதிய விடயங்கள் நிறைய தேவை என்று யூடிப்பின் ஒரு சேனலில் சொல்கிறாள் 
 அனைத்து  றவுகளிற்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.
Share:
Read More

Friday, 21 October 2011

புத்தகம் படித்து நீச்சல் கற்றுக்கொள்ள முடியாது... அதுபோல தான் ஆங்கிலமும்

புத்தகம் படித்து நீச்சல் கற்றுக்கொள்ள முடியாது... அதுபோல தான் ஆங்கிலமும் ..புத்தகம் படித்து ஆங்கிலத்தை    விளங்கிக்  கொள்வதுடன் , படிப்பதை விரைவாக்கிக் கொள்ளலாம் .  சரி  ஓர்  ஆசிரியரை  எமக்கென்று  ஏற்படுத்திக்  கொண்டால் ஆசிரியர் மூலம் கற்றுக் கொண்டு ஆங்கிலத்தில் பேசுங்க.  முதலில்Skype downloard பண்ணவும்  பின்னர்  இத்தளத்தில் இணைந்து  உங்களுக்குப் பிடித்த ஆசிரியரைப் பதிவு  செய்து  கொள்ளுங்கள்.காண்க வீடியோ டெமோ   தொடர்ந்து கற்று கொள்ளுங்கள்..  பேசுங்க.பேசிகிட்டே  இருங்க   இங்கே 
Share:
Read More

Thursday, 20 October 2011

மொழி பெயர்ப்பாளராக பரிசுத்த ஆவி ???

" திருத்தூதர் பணிகள் 2 ஆம் அதிகாரம்  6 ஆம் வசனம் அந்த ஒலியைக் கேட்டுக் கூடிய ஒவ்வொருவரும் தம்  சொந்த  மொழிகளில்  அவர்கள்  பேசக்  கேட்டு குழப்பம் அடைந்தனர். எல்லோரும் மலைத்துப் போய் இதோ  பேசுகின்ற  இவர்கள்  கலிலேயர்  அல்லவா ? அவ்வாறு  இருக்க  நம்  தாய்  மொழியில்் இவர்கள் பேசுவதை நாம் கேட்பது எப்படி என வியந்தனர். "i

மேலுள்ள  வசனத்தில்  கூறப்பட்டது புனை கதையா  ? நடைமுறை  சாத்தியமானதா  ? எனக்குத்  தெரிந்த   வகையில்  ஆராய்கின்றேன்.
தற்பொழுது இணையத்தில்   Google Translate   பி ங் போன்றன எமது தாய் மொழியில் தட்டச்சுச் செய்ய உலகின் பல  மொழிகளில் கணணி மொழி பெயர்த்துத்  தருகின்றது. அத்துடன் அம்மொழியை வாசித்தும் ஓலி வடிவத்தையும்  தருகின்றது. இதன்  மூலம் ஒரு மொழியை ஒரு நொடிப் பொழுதில்  உலகின் பல மொழிகளில் மொழி பெயர்ப்பது சாத்தியம் என விஞ்ஞான ரீதியாக  நிரூபனம்   ஆகின்றது.
    
மேலே  வசனத்தில் கூறப்பட்ட     சம்பவம்    சீடர்கள்  மீது   பரிசுத்த ஆவி   இறங்கிய  பின்னரே  நடை  பெறுகின்றது . மேலுள்ள பந்தியை மொழி பெயர்ப்பாளராக கணணி தொழிற்படுகின்றது ஆனால் அன்று மொழி பெயர்ப்பாளராக பரிசுத்த ஆவியானவரே. திருத்தூதர் தம் சொந்த மொழியில் பே  பரிசுத்த ஆவியானவரே  மொழி  பெயர்த்து  அவரவர்  சொந்த மொழியில்  மாற்றி  அவர்களது  காதுகளில்   வைத்தார். ஆகவே      வேத வசனங்கள் கற்பனையோ ? கட்டுக்கதையோ இல்லை என்பது  விஞ்ஞான ரீதியாக  நிரூபனம்   ஆகின்றது.  மனிதக்  கைகளால்  ஆன  கணனியால்  இவ்வளவு  செய்ய முடியும் போது பரிசுத்த ஆவியால் எவ்வளவு செய்ய முடியும் .   
தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக! ஆமென்
Share:
Read More

Sunday, 16 October 2011

ஆங்கிலத்தில் பேச

ஆங்கிலத்தில் பே  இத்தளத்தில் இணையவேண்டும்.நான் முன்னர் அறிமுகபடுத்திய தளத்தை போல இத்தளத்திலும் பல வசதிகள் பல உள்ளது . இத்தளத்தில் பல மொழிகளும் கற்று தரபடுகின்றது. சரி ஆங்கிலத்தில் பேசுங்க.பேசிகிட்டே  இருங்க இங்கே 
Share:
Read More

Wednesday, 12 October 2011

துடிக்கும் நெஞ்சமே!

வேலியாய் நின்றுனைக் காத்திடுவேன்.
கேலி என்றெண்ணாமல் ஏற்றுக்கொண்டாயே !
மாலையாய் என் வாழ்வைச் சூடுவேன் உனக்கே !
தேன்மொழி உன்குரல் கேட்டயர்ந்தேன்.
வேலை ஓய்விலும் உன்னைக் காணத் துடிக்கும் நெஞ்சமே!


Share:
Read More

Thursday, 6 October 2011

அசத்தும் ஆங்கில அகராதி

வோர்டியா மற்ற அகராதிகளை போல சொற்களுக்கான அர்த்தத்தை தருவதோடு அதற்கான வீடியோ விளக்கத்தையும் தருகிறது என்பதே விஷேசம். எந்த‌ வார்த்தைக்கான பொருள் தேடினாலும் அதற்கான அகராதி அர்த்தம் வந்து நிற்கிறது. அந்த சொல்லின் பயன்பாடு போன்ற விவரங்களும் கொடுக்கப்படுகிறது. கூடவே அந்த சொல்லுக்கான வீடியோ விளக்கத்தையும் காணலாம். அதாவது அந்த சொல்லை யாராவது வீடியோ மூலம் விளக்கியிருந்தால், இல்லையென்றால் நீங்கள் கூட விளக்கத்தை சமர்பிக்கலாம். 
இப்போதைக்கு ஆங்கில மொழி சொற்களே இடம் பெற்றுள்ளன. விரைவில் மற்ற மொழிகளையும் இணைக்கு திட்டம் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பங்கேற்கு ஆர்வம் உள்ளவர்களை வர‌‌வேற்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கே    
 
Share:
Read More

Saturday, 1 October 2011

நம்ம கஷ்டத்தை சொன்னாதான் !

"ஊர்ல நாலு பேர் சிரிக்கிற மாதிரி, எந்தக் காரியத்தையும் என் பையன் பண்ணவே மாட்டான்."
"பையன் என்ன பண்றான்?"
"டி.வி. மெகா சீரியல் டைரக்டரா இருக்கான்!"

"ஆசையே துன்பத்துக்குக் காரணம்னு இப்பதான் நான் தெரிஞ்சுக்கிட்டேன்! எப்படி?"
"என் மனைவியை நான் ஆசைப்பட்டுத் தானே கல்யாணம் பண்ணிக்கிட்டேன்!"

"என் பொண்டாட்டி சமையலை வாயில வைக்கமுடியாது, அவ பேச ஆரம்பிச்சா பைத்தியமே பிடிச்சிடும்..."
"யோவ்... பாங்க்ல வந்து ஏன்யா இதையெல்லாம் சொல்றே...?"
"நம்ம கஷ்டத்தை சொன்னாதான் லோன் கிடைக்கும்னு சொன்னாங்க...!"


"பேஷண்ட் : டாக்டர்... என் புருஷன் கொஞ்ச நாளாவே தூக்கத்தில பேசறாரு இதுக்கு என்ன பண்ணலாம்...?"
"டாக்டர்: நீங்க அவர பகல்ல கொஞ்சம் பேச விட்டா எல்லாம் சரியாய் போயிடும்...!"

Share:
Read More

Popular Posts

Blog Archive