ஜேசு சாமி என்ற ஒருவர் இருக்கிறார்
Thursday, 29 September 2011
ஜேசு இப்போதும் அற்புதம் செய்து வருகிறாரா?
ஜேசு சாமி என்ற ஒருவர் இருக்கிறார்
Monday, 26 September 2011
அடடா கருணாநிதிக்கு இவ்வளவு மரியாதையா??
இப்பகுதியில் வரும் சம்பவங்கள் நாளிதழ்களில் வந்த சம்பவங்களை மையமாக வைத்து எழுதபட்டவை
போர் குற்றத்திலிருந்து தப்பிப்பதற்காக மகிந்த தனது சகாக்களுடன் இரகசிய ஆலோசனை நடாத்துவதாக அறிந்தேன். எப்படியாவது அதில் என்ன நடக்கிறது என அறிய வேண்டும் என முடிவெடுத்தேன். முதலில் எனது தலைமயிரை முன்னோக்கி வாரிவிட்டேன். எனது முகமும் வட்டமுகமாகவும் சப்பை மூக்காவும் இருந்தமையால் வாயிற் காவலர் என்னை சீனன் என நினைத்து ஒன்றும் விசாரிக்கவில்லை. அப்பாடா ஒருவாறு நுழைந்துவிட்டேன் என நினைத்தேன். எங்கும் இராணுவ வீரர்கள் பாதுகாப்பு பலமாக இருந்தது. ஒரு மண்டபத்திற்குள் சோதனையின் பின்னர் அனைவரும் அனுமதிக்கப்பட்டார்கள். நான் எப்படி நுழைவது என யோசித்தேன். அருமையான இடியா தோன்றியது நான் மண்டப வாயிற் காவலரிடம் தமிழ் நாட்டில் இருந்து வருகின்றேன். கனி மொழி இப்போது சிறையில் இருப்பதால் கருணாநிதி என்னை அனுப்பினாருங்கோ சார் என்றேன். என்ன ஆச்சரியம் எந்தவித சோதனையும் இல்லாமல் என்னை மண்டபத்துக்குள் அனுமதித்தனர். அடடா கருணாநிதிசாருக்கு இவ்வளவு மரியாதையா?? சரி மண்டபத்திற்க்குள்ளே மகிந்தவின் நெருங்கிய சகாக்கள் அமர்ந்திருந்தனர். ( அவரகளின் பெயர்கள் சிறிது மாற்றம் செய்துள்ளேன் )
சோமாபாய, SLசீரிஸ் , குறுநா , டுக்கிலஸ் , விம்மல் வீரவன்ச
சில நிமிடங்களின் பின்னர் மிகவும் கலக்கமுற்ற முகத்துடன் மகிந்த வந்தார் . ஆயுபோவன் வயக்கம் (வணக்கம் )சில வெள்ளைக்காரர்கள் என் மீது போர் குற்றம் சுமத்தி வருகின்றனர். எவ்வளவு முயற்சி செய்தும் இவர்களை வழிக்கு கொண்டு வர முடியவில்லை. இவர்களை எமது வழிக்கு கொண்டிவர என்ன வழியெனக் கூறுங்கள்.

விம்மல் வீரவன்ச :- சாகும்வரையான உண்ணா விரதம் இருப்பேன்.
மகிந்த:- மறுபடியும் நான் வந்து யூஸ் கொடுத்து முடித்து வைக்கவா ?
டுக்கிலஸ் :- அனைவருக்கும் இலவச தொலைக்காட்சிப்பெட்டி கொடுப்போம்
டுக்கிலஸ் :- அனைவருக்கும் இலவச தொலைக்காட்சிப்பெட்டி கொடுப்போம்
முனைங் :- சார் நம்ம கருணாநிதி மாதிரியே பேசுறார்
குறுநா :- உங்களது பெயரில் யாழில் ஒரு விளையாட்டு மைதானத்தைத் திறந்துவிடுவோம்.
மகிந்த :- எங்கே வந்து எதைப் பெசுவதுதெனத் தெரியவிலையா?
SL சீரிஸ் :- வெள்ளைக்காரர்க்கு ஒரு தண்ணிப் பாட்டி வைத்துவிடுவோம்
மகிந்த :- அதுதான் ஏற்கனவே வைத்திவிட்டேனே!
சோமாபாய :- இங்குள்ள ஒருவருக்கும் உலக அரசியல் அனுபவம் போதாது அமெரிக்காவில் வெள்ளைகளுடன் நிண்ட காலம் வாழ்ந்தவன் என்ற வகையில் இப்போது வெள்ளைக்காரர்க்கு நிர்வாணமாக நடமாடுவதுதான். ரொம்ப பிடிக்கும் எனவே எமது நாட்டில் நிர்வாணமாக நடமாடும் கடற்கரையைத் திறந்துவிடுவோம். கழியாட்ட விடுதிகளையும் திறந்துவிடுவோம். தமிழரின் கலாச்சாரமும் அழிந்து தமிழினமும் அழிந்து போகும் எமக்கு நல்ல வருவாய் கிடைக்கும். போர் குற்றம் சுமத்தும் வெள்ளைக்காரர்களையும் அங்கு நடமாடவிட்டு எமது கைக்குள் கொண்டுவரலாம்.
மகிந்த: - அருமையான ஆலோசனை தம்பி உடனே தொடங்குவோம்.
முனைங் :-(அடட பாவிங்களா என்ன முடிவு எடுத்தாலும் தமிழனை அழிப்பதை மையமாக வைத்து எடுக்கிறாங்க. சிங்களவனுக்கு தமிழனை அழிப்பது இரத்தத்தில் உறிவிட்டுது போல!)
((உங்க உள்குத்து புரியல... உண்மையான செய்தி என்ன...?))ஆதாரம் இந்த பகுதி உருவாக பின்னூட்டம் மூலம் வினவிய Philosophy Prabhakaranனுக்கு எனது நன்றிகள்
ஆதாரம் :-(( நிர்வாணமாக நடமாடும் கடற்கரையைத் திறந்துவிடுவோம். கழியாட்ட விடுதிகளையும்...... தமிழரின் கலாச்சாரமும் அழிந்து .....))) என்ன காரணம் காண்க இது நடை பெறபோகும் புதிய அழிப்பு
கருணாநிதின் தமிழ் பணி அம்பலம்
((வெள்ளைக்காரர்க்கு ஒரு தண்ணிப் பாட்டி வைத்துவிடுவோம்..)))
இலங்கை அரசுடன் இந்திய கள்ள காதல்! அம்பலமாகும் உண்மைகள் 02
Saturday, 24 September 2011
முனைங்கின் அசத்தலான பதில்கள்
வலை வரலாறில் முதல் முறையாக பதில் அளித்து சில நிமிடங்களே ஆன புத்தம் புதிய முனைங்கின் அசத்தலான பதில்கள்
சிங் சொங் :- வலைப்பூவை பறிக்கமுடிமா ??
முனைங் :- படிக்கமுடியும்
சிங் சொங் :- தமிழில் வலைப்பூவை நிர்வகிக்க தமிழ் தெரிய வேண்டுமா ???
முனைங் :- இல்லை.. Copy பண்ணி Paste பண்ண தெரிந்தால் போதும்
சிங் சொங் :- மகிந்தராஜபக்சவுக்கு எய்ட்ஸ் வருமா ??
முனைங் :- ஏக்கம் வரும்
சிங் சொங் :- நீங்க ஒரு பல் டாக்டரா...?"
முனைங் :- இல்லை... முப்பதிரெண்டு பல்லுக்கும் டாக்டர்...!"
சிங் சொங் :- விடிய விடிய டீவி ஓடினாலும்அதால ஒரு இன்ச் நகர முடியுமா...??
முனைங் :-இப்படி கேட்டால் நான் அழதுடுவன்
பழைய நகைச்சுவை இடுகைகள்
சிலந்தி மனிதன் 007
கம்மல் கம் கிம் ஹிஹி டாட் காம்
Thursday, 22 September 2011
அதுக்கு இத்தனை கடினமா ???
மனித வாழ்க்கை எத்தனை எதிர்பார்ப்புக்கள் நிறைந்து என்பதை நகைச்சுவை உடன் குறும்படம் ஒரு யட்டிக்காகவா??
Wednesday, 21 September 2011
எனது இணைய இணைப்பை யாரெல்லாம் பாவிக்கிறார் என்பதை தெரிந்துகொள்ள
முதலில் நாம் இணையத்திற்கு வயர்கள் மூலமாக இணையத்தில் உலாவந்தோம். ஆனால் இப்பொழுது அனைவரும் வயர் ப்ரீ அல்லது வயர்லெஸ் மூலமாக வேகமாக இணையத்தில் உலா வருகிறோம்.
ஆனால் அதே நேரத்தில் நம் வீட்டுக்கு வெளியே காரில் இருந்து கொண்டு அல்லது பக்கது வீட்டில் இருந்து கொண்டு யாராவது நம் வயர்லெஸ் மோடம் வழியாக நம் காசில் இணையத்தில் உலாவந்தால் என்ன ஆகும்.
நம் காசும் போச்சு நம் தனி மனித இணைய பாதுகாப்பும் போச்சு என்று கொள்ள வேண்டியதுதான். இது போல நடந்தால் கண்டுபிடிக்க நம் கணனி தவிர வேற எந்த கணனிகள் நம் வயர்லெஸ் மோடம் வழியாக இயங்குகிறது என்று தெரிந்து கொள்ள Who is on my Wifi என்ற மென்பொருள் உதவுகிறது.

Tuesday, 20 September 2011
மிக அற்புதமாக காப்பாற்றப்பட்டேன்

மிக சந்தோசத்துடன் பாடசாலைக்குப் போனேன். பாடசாலை ஆரம்பித்து 15 நிமிடங்களில் வானில் இலங்கை அரசாங்கத்துக்குச் சொந்தமான இரண்டு விமானங்கள் பாடசாலையை அண்டி வானில் வட்டமிட்டுக் கொண்டிருந்தது. இதனால் மாணவர்களும், ஆசிரிகளும் கால் போன போக்கில் ஓடினார்கள். நான் தனியே எங்கே ஓடுவது என்று தெரியாது அழுது கொண்டிருந்தேன். விமானத்திலிருந்து பாரிய சத்தத்துடன் ஒரு குண்டு விழுந்த்தது. உடனே அருகிலுள்ள வீடுக்குள் ஒழித்துக் கொண்டேன். அங்கு யாரும் இருக்கவில்லை. அடுத்த குண்டுச் சத்தம் என் நெஞ்சைப் பிளந்ததுடன் மிக அருகில் விழுவதுபோல் உணர்ந்தேன். எனவே என்ன நடந்தாலும் வீட்டிற்கு போவது என முடிவெடுத்தேன். வீட்டை நோக்கி ஓடினேன். நான் எனது வீட்டை நெருங்கிக் கொண்டிருக்கையில் நான் ஒருபோதும் < பார்த்திராத ஒரு நபர் வெள்ளை ஆடை அணிந்து மிக அழகாக நின்றுகொண்டிருந்தார். அவர் வந்த வழியாலே திரும்பி ஓடு தம்பி எனக் கூறினார். நான் எனக்கு அருகில் நின்றவரிடம் இவ்வழியால் போகவேண்டாமாம் எனக் கூறினேன். அவர் யார் உனக்கு சொன்னது இங்கு உன்னையும் என்னையும் தவிர யாருமேயில்லை. நீ சின்னப் பெடியன் உனக்கு என்ன தெரியும் நீ பயத்தில் ஊளராதே என்னுடன் வா என்றார். நான் முடியாதெனக் கூறி வந்த வழியால் திரும்பி ஓடிவிட்டேன். ஓடி சிறுது தூரத்தின் பின்னர் ஒரு குண்டுச் சத்தம் கேட்டது. அந்த மனிதர் போன பாதையில் விழுந்தது. அவர் இறந்துவிட்டார்.அன்று என்னை வழிநடத்தியவர் ஆண்டவராகிய ஜெசுவே
தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக! ஆமென்
தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக! ஆமென்
ஜேசு சாமி என்ற ஒருவர் இருக்கிறார்
Friday, 16 September 2011
Wednesday, 14 September 2011
கருணாநிதின் தமிழ் பணி அம்பலம்
பெரிதாக பார்க்க மேலுள்ள பந்தியில் கிளிக் பண்ணவும்
ராதிகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இப் பெண்ணின் வயது 19 ஆகும். அவர் யாழில் உறவினர்களுடன் வசித்துவந்தார். இப் பெண்ணை முதலில் இலங்கைப் புலனாய்வுப் பிரிவினர் கைதுசெய்து பின்னர் அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். 3 கிழமைகளுக்குப் பின்னர் விடுவிக்கப்பட்ட அப்பெண் சிகிச்சைக்காகச் சென்றபோது அவருக்கு எயிட்ஸ் நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து அவர் மனம் உடைந்த நிலையில் இருந்ததோடு அவரை உறவினர்களும் வீட்டை விட்டு வெளியேறுமாறு கூறிவிட்டனர். ஒரு ஏஜன்டின் கைகளில் மாட்டிக்கொண்ட அப்பெண்ணுக்கு பல கதைகள் சொல்லப்பட்டிருக்கிறது. அதாவது "துன்பத்தைத் தந்தவனுக்கே அதை திருப்பிக்கொடு" என்று கூறுவதுபோல உனக்கு இந்த வருத்தத்தை தந்தவர்களுக்கு நீ அதனைத் திருப்பிக்கொடு என்று சிலர் கூறி அவரை மூளைச் சலவை செய்துள்ளனர்.
அதனால் அப் பெண் இலங்கை இராணுவம் சென்றுவரும் விபச்சார விடுதி ஒன்றில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் நோக்கம் முழுவதும் தனக்கு பரவிய நோயை எல்லா இராணுவத்துக்கும் பரப்புவது என்பது தான். ஒரு பழிவாங்கலைப் போல அப்பெண் தன்னை வருத்தி இச் செயலில் ஈடுபட்டுள்ளார். நாட்கள் கடந்தோடிய நிலையில் நோய் முற்றியிருக்கவேண்டுமே இதுவரை எயிட்ஸுக்கு மருந்து எடுக்கவில்லையா என நெருங்கிய தோழி ஒருவர் கேட்டபோது அப் பெண் திரும்பவும் வைத்தியசாலை சென்றுள்ளார். குறிப்பிட்ட அந்த சிங்கள வைத்தியர் அங்கு இல்லாத காரணத்தால் அவர் வேறு ஒரு வைத்தியரிடம் சிகிச்சை பற்றி ஆலோசனை நடத்தியுள்ளார். ஆனால் அப்பெண்ணுக்கு எயிட்ஸ் நோய் இருப்பதற்கான எந்த அறி குறியும் காணப்படாததால் சந்தேகமுற்ற மருத்துவர் அப்பெண்ணை மீண்டும் ரத்தப்பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளார்.
கிடைக்கப்பெற்ற பேறுகளால் அப்பெண் ஆடிப்போயுள்ளார். குறிப்பாகச் சொல்லப்போனால் இன்றுவரை அவருக்கு எயிட்ஸ் நோயின் தாக்கம் இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. முன்னர் அங்கே இருந்த சிங்கள டாக்டரின் பெயரும் தெரியாது, பரிசோதித்த டாக்டர் ஏன் தான் இருக்கும் உறவினர் வீட்டிற்கு தனக்கு எயிட்ஸ் நோய் இருப்பதாக அறிவித்தார் என்பது எல்லாம் அப் பெண்ணுக்கு மெல்ல மெல்ல புரிய ஆரம்பித்தது. தான் அனாதரவாக இருந்தபோது தன்னை அரவணைத்து புத்திசொல்வது போல பாழுங்கிணற்றில் தள்ளிய நபர்கள் மாயமாக மறைய. உயர் பாதுகாப்பு வலயத்திற்கு அருகில் இராணுவ உதவியோடு இயங்கும் அந்த விபச்சார விடுதியைக் காட்டிகொடுக்கவும் முடியாது இப் பெண் தத்தளித்துள்ளார். தற்போது அவர் இந்தியா சென்று அங்கே நிம்மதியாக வாழ யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வங்கி ஊழியர் ஒருவர் உதவி புரிந்துள்ளார்.
இதில் வேதனையான விடையம் என்னவென்றால் இந்த வங்கி ஊழியரும் ஒரு காலத்தில் இப் பெண்ணிடம் சென்றவராம். தமிழர் என்று நினைக்கவேண்டாம். அவர் ஒரு சிங்களவர். ஆனால் பாதிக்கப்பட்ட பெண்ணை தற்செயலாகக் கண்ட அவர், இப் பெண் கூறிய சோகக்கதையை அரை குறையாக விளங்கிக்கொண்டு இந்த உதவியைச் செய்துள்ளார். சென்னை சென்றதும் பெண்கள் நல வாரியத் திட்டத்தின்கீழ் பாதிக்கப்பட்ட இப் பெண்ணுக்கு உதவுவதாக செல்வி ஜெயலலிதாவின் அரசு தெரிவித்துள்ளது பெரும் நம்பிக்கையை ஊட்டுவதாக உள்ளதாக அவர் அதிர்வு நிருபருக்குத் தெரிவித்துள்ளார்.

நன்றி அதிர்வு
வலைப்பூக்கள் ஒரே தளத்தில்
தமிழர்களுக்காக தமிழில் உள்ள முன்னனி இணையத்தளங்கள் வலைப்பூக்கள் ஒரே தளத்தில். நன்றி பூவரசு எனது தளத்தையும் இணைத்தமைக்கு கண்க பூவரசு
Sunday, 11 September 2011
உங்கள் நினைவுகளைச் சுமந்து வாழ்கின்றோம்
அதிர்ச்சியினால் என்ன செய்வதென்று அழுது துடித்தோம்
உம்மைக் காணாது நிலை தடுமாறி நின்றோம்
பாசமுள்ள பிள்ளைகளை நேர்வழிகாட்டி விருட்சமாக்கி
பரிதவிக்கவிட்டுச் சென்றாயோ!
குடும்பத்தின் வழிகாட்டியாகவும் பாசத்தின் ஒளி விளக்காகவும் இருந்த
நீங்கள் பிரிய மனம் வந்ததோ!
அன்பு மொழி பேசி எங்களை மகிழ வைப்பீர்களே!
உம் அன்பு மொழி எப்போது கேட்போம்!
உம் பிரிவால் முகம் வாடி நிற்கின்றோம்
உம் இறுதி மூச்சில் எத்தனை ஏக்கங்களுடன் சென்றிரோ!
ஆண்டுகள் சென்றாலும் எம் நெஞ்சை விட்டகலாது
உங்கள் நினைவுகளைச் சுமந்து வாழ்கின்றோம்
இக் கவிதை இந்திய அமைதி படையால் கடுமையாக தாக்கி இறந்த என் அப்பாவுக்கு சமர்பிக்கிறேன்
Friday, 9 September 2011
திருமண நிகழ்வுகளையும் அலங்கரிக்கத் தொடங்கி விட்டார் தமிழீழ தேசியத் தலைவரான பிரபாகரன்.
அண்மையில் மதுரையில் உள்ள பெரியார் நகர் பேரூந்து நிறுத்தத்தில் சுவரொட்டி ஒன்றைக் காண நேரிட்டது. அது ஒரு திருமண நிகழ்வு வரவேற்பு சுவரொட்டி அதன் வலது பக்கத்தில் கம்பீரமாக காட்சியளித்தார் பிரபாகரன்.
தற்போது அரசியலையும் தாண்டி தமிழகத்தில் திருமண நிகழ்வுகளையும் அலங்கரிக்கத் தொடங்கி விட்டார் தமிழீழ தேசியத் தலைவரான பிரபாகரன். இதன் மூலம் தமிழக மக்கள் தலைவர் மேல் வைத்திருக்கும் மதிப்பு மரியாதை தெளிவாகப் புலனாகிறது.

Thursday, 8 September 2011
பிரபலமான மனிதர்களின் விபரங்களை தெரிந்து கொள்வதற்கு..
உலக அளவில் பிரபலமான மனிதர்களின் தகவல்கள் தேடிக்கொடுக்க ஒரு தேடுபொறி உள்ளது. உலகின் முக்கிய பிரபலங்கள் மட்டும் இல்லாமல் இணைய உலகில் முக்கிய நபர்களையும் இத்தளம் தேடிக்கொடுக்கிறது.
சில நேரங்களில் குறிப்பிட்ட நபரைப்பற்றிய பல விதமான தகவல்கள் போதுமான அளவு இல்லை என்று நினைக்கும் நபருக்கு பிரபலங்களின் விபரங்களை கொடுக்க ஒரு தளம் உதவுகிறது. உலக அளவில் முக்கிய நபர்களை எளிதாக தேடி கொடுப்பதற்காக இத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
இத்தளத்திற்கு சென்று யாரைபற்றிய விபரங்கள் வேண்டுமோ அவரின் பெயரைக் கொடுத்து Enter பொத்தானை சொடுக்கி தேட வேண்டியது தான். வரும் தேடல் முடிவில் யாரைப்பற்றிய தகவல் வேண்டுமோ See profile என்பதை சொடுக்கி அவரின் முழுவிபரங்களையும் தெரிந்து கொள்ளலாம் முக்கிய குறிப்பு =என்னைப்பற்றி அறிய இத்தளத்தில் தேடாதிங்க நான் இத்தளத்தில் உள்ளவர்களை விட ரொம்ப பிரபல்யம்முங்கோ அதுக்கு தான் இருக்கு google profile
இங்கே
Tuesday, 6 September 2011
இலங்கைத் தமிழர்களுக்காக தமிழக கட்சிகள் வெறும் வார்த்தைஜாலங்கள் மட்டுமே!
இலங்கைத் தமிழர்களுக்காக தமிழக அரசியல் கட்சிகள் உதட்டளவில் மட்டுமே ஆதரவைத் தெரிவித்தன என்று விக்கிலீக்ஸ் இணையதளம் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளது. |
இந்தியாவில் பணியாற்றிய அமெரிக்க தூதரக அதிகாரிகளை மேற்கோள் காட்டி இந்தத் தகவலை விக்கிலீக்ஸ் வெளியிட்டிருக்கிறது.
இலங்கை இறுதிக்கட்ட போரின்போது தமிழக அரசியல் கட்சிகள் வெறும் வார்த்தைகளால் மட்டுமே தங்களது கண்டனத்தை தெரிவித்தன, இலங்கைத் தமிழர்களுக்காக அந்தக் கட்சிகள் தெரிவித்த ஆதரவும் உதட்டளவில் மட்டுமே இருந்தது என்று 2006-ல் இந்தியாவுக்கான அமெரிக்க தூதரக கான்சல் ஜெனரலாகப் பணியாற்றிய டேவிட் ஹூப்பர் கூறியுள்ளார்.
2007 நவம்பர் 20-ல் இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதரகம் வாஷிங்டனுக்கு அனுப்பிய மற்றொரு தகவலில் திமுக தலைவர் கருணாநிதி பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகளுக்கு ஆதரவளிப்பது தொடர்பான விவகாரத்தில் கருணாநிதி சாதுர்யமான அணுகுமுறையைக் கடைப்பிடித்தார். கட்சித் தொண்டர்களையும், காங்கிரûஸயும் சமாதானப்படுத்தும் வகையில் அவர் நடந்து கொண்டதாக அமெரிக்க தூதரக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவான அவரது கோரிக்கைகள், வெறும் வார்த்தைஜாலங்கள் மட்டுமே, அவர் உதட்டளவில் மட்டுமே பேசினார். இலங்கைத் தமிழர்களுக்கு சாதகமாக கருணாநிதி பேசினாலும், அவர்களுக்காக மத்திய அரசை எவ்விதத்திலும் நிர்பந்திக்கவில்லை என்று வாஷிங்டனுக்கு அனுப்பிய தகவல்களில் அமெரிக்க தூதரக அதிகாரிகள் தங்கள் கருத்தைப் பதிவு செய்துள்ளனர்.
நன்றி eu