Wednesday, 8 June 2011

எப்படி சமாளிக்கப் போகிறாரோ சீமான்?

எதிரியை வீழ்த்த எந்த ஆயுதத்தையும் தூக்கலாம் என்பது போர் முறைக்கு கூட பொருந்தாத தியரி. ஆனால் சீமானை காலி செய்வதற்காக சிலர் எடுக்கும் ஆயுதங்கள் எல்லாமே புடவையும் சுரிதாருமாக இருப்பதுதான் சோகம்.


பிரண்ட்ஸ் விஜயலட்சுமியின் விவகாரம் நாடெங்கும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியிருக்கிற இந்த நேரத்தில் மேலும் ஒரு வழக்கு சீமானை சுற்றி பின்னப்படலாம் என்கிறது நம் காதுக்கு வந்த ரகசிய சோர்ஸ் ஒன்று.

தம்பி படத்தில் பூஜாவை நடிக்க வைத்திருப்பார் சீமான். ஒரு நடிகைக்கும் இயக்குனருக்குமான உறவு அதோடு முடிந்து போயிருக்கும். அப்படம் வெளிவந்தும் பல வருடங்கள் ஆகிவிட்டது. இந்த நிலையில் இலங்கையில் தங்கியிருக்கும் தனது சொந்தங்களை பார்க்க போயிருந்தாராம் பூஜா. அங்கு வைத்து அவரிடம் ஒரு கட்டாய புகார் எழுதி வாங்கியிருக்கிறதாம் இலங்கை அரசு.அதில் பூஜா சீமானை ஒரு குணக்கேடர் என்று சித்தரித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.இன்னும் சில தினங்களில் இந்த விவகாரமும் விஜயலட்சுமியின் புகாரோடு இணைந்து கொள்ளும் ஆபத்து இருக்கிறது. எப்படி சமாளிக்கப் போகிறாரோ சீமான்?

நன்றி மனிதன் 
Share:

0 comments:

Post a Comment

Popular Posts

Blog Archive