Sunday, 28 November 2010

குழந்தையாக!!!!!

 நான் படித்ததில் பிடித்த கவிதை

Sunday, 21 November 2010

சிரிப்பு





















எந்த வேளையிலும் உன் சிரிப்பு

என நினைவுகளை நிறைக்கின்றது

உன் சிரிப்பு இருட்டிலும் ஒளியாக உள்ளது

கனவிலும் சந்திரனிலும் உன் பெயர் எழுதியுள்ளேன்

உன் சிரிப்பொலி தென்றலில் கேட்கின்றேன்

என் இதயத்தில் உன் குரல் கேட்கின்றேன்

எந்நேரமும் உன்னை நினைக்கத் தோன்றுகிறதே!!!!!!!!!!!!!!!!!!!

Tuesday, 16 November 2010

மனதில்

பிறரின் உணர்வைப் புரிந்து
மதித்திடல் வேண்டும்
வார்த்தைகளின் வடுக்களைப் 
பலர் அறிவதேயில்லை
உணர்வுகள் கண்ணீராய்
ஊறி காய்ந்துவிடுவதில்லை
அடிமனதில் ஊன்றினின்று
 காலத்தால் வீறுகொண்டெழும்   
என்பதை  உணர்ந்திடல் வேண்டும்

 

Saturday, 13 November 2010

மாவீரர்களின்

செநீராலும் கண்ணீராலும்

எழுதபடுகிறது ஈழ வரலாறு

செம் மொழிஜாம் எம்

தமிழ்மொழிஜானது எம்

மாவீரர்களின் வீர காவிஜமே

Wednesday, 10 November 2010

உயர்ந்திடு

சஞ்சலம் நிறைந்த வாழ்விலும்
சங்கடம் மலிந்த உலகிலும்
சருகாய் மடிந்து போகாமல்
நம்பிக்கையைப் பிடித்து
  உயர்ந்திடு வா!ழ்வில்

Monday, 8 November 2010

அறியாததால்

நண்பர் என்றார், உறவினர் என்றார்
நாடியை நசுக்குவாரென யார் கண்டது
கண்டதும் நட்புக் கொண்டதால்???????????
வந்த வினை!!!!!!!
விதியின் விளையாட்டல்ல
சரியாக அறியாததால் வந்த பிழைதானே !!!!!!!!!!!! 

Sunday, 7 November 2010

வர்ண விளக்கு

உலகின்  ௬ரை வானம்
உலகின் மெத்தை முகில்கள்
இரவில் ஒளி சந்திரன்
இரவில் வர்ண விளக்கு நட்ச்சந்திரம்
அடடா இயற்கையின் அழகே தனிடா

Friday, 5 November 2010

ஓயாமல்




உன்னில் 12 இலக்கங்கள்



சிறியோர் முதல் பெரியோர்


வரை உன்னைப் பார்க்கின்றார்


உன் முட்கள் உன்னைக் குத்தவில்லை


எமது இதய துடிப்பு உன்னில் கேட்கிறதே


ஓயாமல் ஓடிக் கொண்டிருந்து எம்மையும்


உன் பின்னால் ஓட வைத்துக் கொண்டிருக்கிறாயே







Thursday, 4 November 2010

விடியவில்லை

தாயின் தாலாட்டு கேட்கவில்லை
செல் ஒலியே எனக்கு தாலாட்டு
செல் வந்த பூமியில்
நடைபிணமாக வாழ்ந்தேன்
என்றுமே விடியவில்லை எம்தேசம்

ஈழம்

Wednesday, 3 November 2010

பெரியவர்

பெரிவர் என்பது வயதில் அல்ல
மனதின் நல்ல எண்ணத்தில்
ஆயிடுவார் பெரியவர்

பறவைகள்

பறவைகள் பறப்பது பார்
கவலைகள் இருக்குதா பர்ர்
சுகந்திரமாக பறக்குது பர்ர்
ஒன்று கூடி வாழுது பார்